விராட் கோலி! King Kohli எனவும் Run Machine எனவும் அழைக்கப்படும் விராட் கோலி இந்தியா, விசாகப்பட்டினத்தில் இடம்பெறும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 10,000 ஓட்டங்களை கடந்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார்.
10,000 ஓட்டங்களைக் கடந்த வீரர்களின் பட்டியல்:
வீரர் / துடுப்பெடுத்தாடிய இன்னிங்ஸ்கள்
விராட் கோலி - 205
சச்சின் டெண்டுல்கர் - 259
சவுரவ் கங்குலி - 272
ரிக்கி பொன்டிங் - 266
ஜாக் கல்லிஸ் - 272
மகேந்திர சிங் தோனி - 273
பிரையன் லாரா - 278
ராகுல் டிராவிட் - 287
திலகரத்ன டில்ஷான் - 293
குமார் சங்கக்கார - 296
இன்சமாம் உல் ஹக் - 299
சனத் ஜயசூரிய - 328
மஹேல ஜயவர்தன - 333
10,000 ஓட்டங்களைக் கடந்த 13வது சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் 5வது இந்திய வீரர் விராட் கோலி.
*துடுப்பெடுத்தாடிய இன்னிங்ஸ்களின் படி குறைந்த இன்னிங்ஸ்களில் 10000 ஓட்டம் - 205 இன்னிங்ஸ்
* விளையாடிய போட்டிகளின் படி குறைந்த போட்டிகளில் 10000 ஓட்டங்கள் - 213 போட்டிகள்
* குறைந்த பந்துகளில் 10,000 ஓட்டங்கள் - 10,813 பந்துகள்
* குறைந்த காலத்தில் 10,000 ஓட்டங்கள் - 10 வருடம், 67 நாட்கள் (முதல் போட்டியில் இருந்து)
10,000 ஓட்ட சாதனைகள் மட்டுமல்லாது இந்த வருடத்தில் 1000 ஓட்டங்களையும் விராட் கோலி கடந்துள்ளார். இந்த போட்டியுடன் விராட் கோலி 10,070 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 2018 ஆம் ஆண்டில் 1060 ஓட்டங்களைப் பெற்று இந்த ஆண்டுக்கான அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.


0 Comments